என்ன அடுத்த அப்டேட்-க்கு ரெடியா!? ‘பீஸ்ட்’ படத்தின் அடுத்த அப்டேட் நாளை வெளியாகிறது!

by Column Editor

பீஸ்ட் படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் நாளை மாலை வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். விஜயின் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் இரு போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் தான் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் படத்தின் தங்கள் பகுதிக்கான படப்பிடிப்பை நிறைவு செய்தனர். இந்நிலையில் பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டேட்டிற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டேட் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் முதல் பாடல் குறித்த ப்ரோமோ ஒன்றும் வெளியாகலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

பீஸ்ட் படத்தில் இயக்குனர் செல்வராகவன் வில்லனாக நடிக்கிறாராம். மேலும் அபர்ணா தாஸ், டாம் சைன் சக்கோ, ரெடின் கிங்ஸ்லீ உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment