முதல் நாளே இத்தனை கோடி வசூலா – தசராதிரைப்படத்தின் முதல் நாள் வசூல் ..

by Lifestyle Editor

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, உள்ளிட்ட 5 மொழிகளில் நேற்று வெளியான திரைப்படம், ‘தசரா’.

இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில், நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி உள்ள ‘தசரா’ திரைப்படத்தின், முதல் நாள் வசூல் குறித்த விபரம் வெளியாகி அனைவரையுமே ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் பழி வாங்கப்படும் படலத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் தசரா திரைப்படம், நேற்று மிகபெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. இந்த படத்தில், நேனு லோக்கல் படத்தின், வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக கீர்த்தி சுரேஷ், நானிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இப்படம் நேற்று வெளியானது முதலே தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வந்தது. மேலும் முதல் நாளில் மட்டும் இந்தியாவில் சுமார் 38 கோடி வசூல் சாதனை செய்துள்ளதாக, திரைப்பட வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Comment