நடிகர் அருண் விஜய் தன் பிறந்தநாளன்று ரத்த தானம் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார். இன்று அருண் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலம் மாபெரும் இரத்ததான முகாமை இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடத்தினர். அதில் பலர் ஆர்வமாகக் கலந்துகொண்டு இராயப்பேட்டையிலுள்ள அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தனர். ரத்த தான முகாமில் 40 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டு இரத்தம் வழங்கினார்கள்.
இந்நிலையில் ரசிகர்களின் ரத்த தானம் முகாம் பற்றி அறிந்த அருண் விஜய் நேரில் வந்து அவரும் ரத்த தானம் செய்துள்ளார். ரத்த தான முகாமைத் தொடர்ந்து ரசிகர்கள் மேலும் ஒரு அரிய செயலை முன்னெடுத்துள்ளனர். இன்று இரத்த தானம் செய்ததோடு அல்லாமல், அவசர தேவையாக எப்போது இரத்தம் தேவைப்பட்டாலும், ரசிகர் மன்றம் மூலம், தேவைப்படுவோர்க்கு இரத்த தானம் அளிக்க முடிவு செய்துள்ளனர்.ரசிர்களின் இந்த முன்னெடுப்பால் நெகிழ்ச்சியடைந்த அருண் விஜய் ரசிகர்களின் அன்பிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.