500 ஆண்டுகள் பழைமையான சிலை – இந்தியாவிடம் ஒப்படைக்கும் பிரித்தானியா!

by Editor News

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருந்த 500 ஆண்டுகள் பழமையான வெண்கல சிலையை இந்தியாவிடம் ஒப்படைக்க பிரித்தானிய பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது.

இந்த சிலையானது, தமிழ்க் கவிஞரும் வைணவ துறவியான திருமங்கை ஆழ்வாரின் சிலை என குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், இந்த சிலை 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலையென இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

குறித்த சிலை பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சிலையை ஆங்கிலேயர்கள், இந்தியாவிலுள்ள ஒரு கோவிலில் இருந்து கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

1897 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் காலனித்துவவாதிகள் ஆயிரக்கணக்கான வெண்கலம் மற்றும் பிற உலோக கலைப்பொருட்களை கொள்ளையடித்து, இராணுவ நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க லண்டனில் விற்கப்பட்டதாக வரலாறு குறிப்பிடுகின்றது.

அவ்வாறு ஆங்கிலேயர்களால் இந்தியாவின் கோவில் ஒன்றிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 500 ஆண்டுகள் பழைமையான குறித்த சிலை, பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீண்டும் இந்தியாவிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment