மங்கோலியாவில் கடும் பனிப்புயல் – 70 இலட்சம் கால்நடைகள் உயிரிழப்பு!

by Editor News

மங்கோலியாவில் வீசி வரும் பனிப்புயல் காரணமாக, சுமார் 70 இலட்சம் கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், விளைநிலங்கள், மேய்ச்சல் நிலங்கள் ஆகியவை பனிப்புயலால் அழிவடைந்துள்ளன.

இதனால் அங்கு உணவு பொருட்கள் உற்பத்தி செய்யவதில் பாரிய சிக்கில் ஏற்பட்டுள்ளதுடன், அங்குள்ள மக்களின் இயல்வாழக்கையும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவுக்கும், சீனா மற்றும் தீபெத்துக்கு இடையில் கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் மங்கோலியா நாடு அமைந்துள்ளது.

இதனால், அங்கு வருடத்திற்கு 10 மாதங்கள் மைனஸ் 30 டிகிரி செல்சியல் அளவில் குளிர்ந்த வானிலையே நிலவும்.

இந்நிலையில், மங்கோலியாவில் இயல்பை காட்டிலும் தற்போது பயங்கரமான பனிப்புயல் வீசி வருவதனால், மங்கோலியா முழுவதும் பனியாலால் உறைந்து போயுள்ளது.

இந்நிலையில், கடுமையான பனிப்பொழிவு காரணமாக ஏற்பட்டுள்ள உணவு பொருள் தட்டுப்பாட்டால், மங்கோலியாவில் சுமார் 70 இலட்சம் கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்குது.

Related Posts

Leave a Comment