சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு (WHO), பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தும் H5N1 வைரஸால் ஏற்பட்ட முதல் மனித மரணத்தை உறுதிப்படுத்தியது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் பெருமளவில் பரவி, வரும் ஆண்டுகளில் மேலும் பல உயிர்களை பாதிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
மெக்சிகோவில் 59 வயது முதியவர் ஒருவர் எச்5என்2 வகை பறவைக் காய்ச்சல் காரணமாக முதல்முறையாக உயிரிழந்துள்ளார். மெக்சிகோவில் குறிப்பிட்ட 59 வயது முதியவர் H5N1-ஆல் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதாக மெக்சிகன் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், அந்த நபருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது பற்றி இன்னும் தெளிவாக தெரியவில்லை.
அறிக்கைகளின்படி, உயிரிழந்த நபருக்கு பல உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன. மேலும், அவருக்கு தொற்று எவ்வாறு பரவியது என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களிடமும், உறவினர்களிடமும் சோதனை நடத்தப்பட்டது. அவர்களுக்கு கடுமையான அறிகுறிகள் தொடங்குவதற்கு முன்பு, முன்னேச்சரிக்கை நடவடிக்கைக்காக ஏற்கனவே மூன்று வாரங்களாக மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்ததாக WHO தெரிவித்துள்ளது.
தற்போது, பறவைக் காய்ச்சலின் முதல் மனித மரணத்துடன், ஒரு பெரிய மற்றும் அச்சுறுத்தும் கேள்வி எழுகிறது, அதாவது, இந்த தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுமா? என்பதுதான்.
இதுவரை ஆதாரம் இல்லை:
எச்5என்2 வகை பறவைக் காய்ச்சல் காரணமாக மெக்சிகோவில் ஒருவர் உயிரிழந்துள்ளதை அடுத்து, இந்த தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவியதற்கான எந்த ஆதாரமும் தங்களிடம் இல்லை என்று நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த நபருக்கு ஏற்கனவே பல சுகாதார பிரச்சனைகள் இருந்தன என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது, மேலும் அவருடன் தொடர்பு கொண்ட அனைவருக்கும் நடத்திய சோதனையில் ரிசல்ட் நெகடிவ்-ஆக வந்தது.
WHO-ன் செய்திக்குறிப்பு படி, உயிரிழந்த நபருடன் தொடர்பில் இருந்த 17 பேர் அடையாளம் காணப்பட்டு மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டனர், அவர்களில் ஒருவர் ஏப்ரல் 28 மற்றும் 29 அன்று மூக்கு ஒழுகுவதைப் புகாரளித்தார். இதனையடுத்து, இந்த மருத்துவமனையில் மே 27 முதல் 29 வரை அனைவரிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் சோதனை அடிப்படையில் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் SARS-CoV 2 நோய்க்கு எதிராக நெகடிவ் வந்தது என்றும் WHO தெரிவித்துள்ளது. மேலும், உயிரிழந்தவரின் வசிப்பிடத்திற்கு அருகில் அடையாளம் காணப்பட்ட 12 பேருக்கும் நடத்திய சோதனையில் தொற்றுநோய்க்கு எதிராக நெகடிவ் வந்தது.
கண்டறியப்பட்ட பறவைக் காய்ச்சலால் மக்களுக்கு ஆபத்து இல்லை என்று மெக்சிகோ சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், நோய்த்தொற்றுக்கான ஆதாரம் அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறியுள்ளது.
H5N2 என்பது பறவைக் காய்ச்சல் வைரஸின் துணை வகையாகும், இது பறவைகளை, குறிப்பாக கோழிகளை பாதிக்கிறது. பறவைகள் மத்தியில் காணப்படும் இந்த தொற்றுநோயானது, கடுமையான சுவாச நோய் ஏற்பட்டு, பாதிக்கப்பட்ட பறவைகள் கூட்டத்தில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது. மேலும் இது, மனிதர்களைத் தாக்குவது அரிதானவை என்றாலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்ட விலங்குகள், பறவைகள் அல்லது அசுத்தமான சூழல்களுடனான நேரடி தொடர்பு கொள்வது மூலம் இந்த தொற்று மனிதனுக்கு ஏற்படலாம்.