தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.1520 சரிவு…

by Editor News

ஆபணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறைந்து வருகின்றது. இன்று சவரனுக்கு 1520 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.6,840 ஆகவும், சவரன், ரூ.54,720 ஆகவும் இருந்து வந்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.190 குறைந்து 6,650 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 1520 குறைந்து, ரூபாய் 53 ஆயிரத்து 200 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.

இதே போன்று வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.96.00 ஆகவும், கிலோவிற்கு ரூ.96,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.

Related Posts

Leave a Comment