44
ஆபணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறைந்து வருகின்றது. இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.6,745 ஆகவும், சவரன், ரூ.53,960 ஆகவும் இருந்து வந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து 6,725 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 160 குறைந்து, ரூபாய் 53 ஆயிரத்து 800 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.
இதே போன்று வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.96.20 ஆகவும், கிலோவிற்கு ரூ.96,200 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.