குறைந்தது தங்கம் விலை…

by Editor News

ஜூன் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று முன்தினம் ஜூன் 8ஆம் தேதி தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1,520 குறைந்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது.

அதன் படி, இன்று ஜூன் 10ஆம் தேதி 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,630-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.172 குறைந்து ஒரு கிராம் ரூ.5,431-க்கும் ஒரு சவரனுக்கு ரூ.1,376 குறைந்து ஒரு சவரன் ரூ.43,448க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.96.20க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.96,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment