சென்செக்ஸ் 147 புள்ளிகள் வீழ்ச்சி ..

by Lifestyle Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 147 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

ஐ.டி. நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் குறித்த எதிர்பார்ப்புகள், நம் நாட்டின் கடந்த டிசம்பர் மாத பணவீக்கம், அமெரிக்காவின் பணவீக்கம் குறித்த எதிர்பார்ப்புகள் போன்ற காரணமாக இன்று பங்கு வர்த்தகம் மந்தமாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் எல் அண்ட் டி உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,613 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,883 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 156 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.279.93 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.40 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 147.47 புள்ளிகள் குறைந்து 59,958.03 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 37.50 புள்ளிகள் சரிவு கண்டு 17,858.20 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment