தொடர் உச்சத்தில் தங்கம் விலை ..!

by Lifestyle Editor

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 41 ஆயித்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.312 வரை அதிகரித்தது. நேற்று ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து, 5,115 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 40,920 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு 120 உயர்ந்து 22 கேரட் தங்கம் 41 ஆயித்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று ஒருகிராம் தங்கம் ரூ.15 அதிகரித்து 5 ஆயிரத்து 130-க்கு விற்பனையாகிறது. ஆனால் வெள்ளி விலை குறைந்து உள்ளது. வெள்ளி கிராம் ரூ 74.50-ல் இருந்து ரூ.74.30 ஆகவும். கிலோ ரூ.74,500-ல் இருந்து ரூ.74.300 ஆகவும் குறைந்து உள்ளது. புத்தாண்டு, பொங்கல் பண்டிகை நேரத்தில் தங்கம் விலை அதிகரித்து வருவது நகை வாங்குவோரை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Posts

Leave a Comment