பிரித்தானியாவில் தங்கத்தின் விலை உயர்வையடுத்து Rolex கடிகாரங்களின் விலைகளும் அதிகரிப்பு!

by Editor News

பிரித்தானியாவில் தங்கத்தின் விலை அதிகரிப்பையடுத்து, Rolex கை கடிகாரத்தின் விலையும் உயர்வடைந்துள்ளது.

சுவிஸ் கடிகார தயாரிப்பு நிறுவனமான Rolex, அதன் பிரித்தானிய இணையதளத்தில் உள்ள தகவலின்படி, in white gold rose நிறத்தில் உள்ள Rolex Daytona chronograph கடிகாரத்தின் விலை 4 சதவீதம் வரை உயர்ந்து 37,200 பௌண்டுகளாக நிர்ணயம் செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

உலகின் தலைசிறந்த ஆடம்பர கடிகாரமான Rolex ஆண்டுக்கு 1 மில்லியனுக்கும் அதிகமான கடிகாரங்களை உற்பத்தி செய்கிறது.
இவை 10 பில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கு ( இலங்கை பணமதிப்பில் ரூ.3,33,046 கோடி) விற்பனையாகிறது.

Geneva-வை தளமாகக் கொண்ட Rolex நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கடிகாரங்களின் அந்தந்த நாட்டிற்கான குறிப்பிட்ட விலைகள், ஒரு நாட்டின் பொருளாதார வலிமையின் குறிகாட்டியாகக் காணப்படுகின்றன.

ரோலக்ஸ் பொதுவாக ஆண்டுக்கு ஒருமுறை, ஜனவரியில் தனது கடிகாரங்களுக்கான விலையை உயர்த்துகிறது.
இதன்போது, சில ஸ்டீல் கடிகாரங்கள் உட்பட Rolex கடிகாரத்தின் சில வகைகளின் விலைகள் பிரித்தானியாவில் 4 சதவீதம் அதிகரித்தது.

பல தசாப்தங்களில் டொலருக்கு எதிராக பவுண்டு அதன் மிகக் குறைந்த நிலைக்குச் சென்றதால், 2022 ஆம் ஆண்டில், ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் பிரித்தானியாவில் இரண்டு முறை விலைகளை உயர்த்த Rolex ஐ முக்கிய நாணய மாற்றங்கள் தூண்டியது.

இதனால், ரோலக்ஸ் ஐரோப்பிய நாடுகளில் குறித்த ஆண்டில் இரண்டு முறை விலையை உயர்த்தியமை குறிப்பிடக்கது.

Related Posts

Leave a Comment