229
பிரித்தானியாவில் ஒமிக்ரோன் மாறுபாட்டின் விரைவான பரவல் காரணமாக கொரோனா தொற்றுடன் தொடர்புடைய இறப்புகள் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிபிசி செய்தி சேவைக்கு நேற்று கருத்து தெரிவித்துள்ள பிரித்தானிய சுகாதார செயலாளர் சஜிட் ஜாவிட் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
லண்டனில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களில், 44 சதவீதத்தினருக்கு இந்த மாறுபாடு பரவி இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், அடுத்த ஓரிரு நாட்களில், இந்த நிலைமை மேலும் தீவிரமடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.