ஹிப்ஹாப் ஆதி இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘அன்பறிவு’ ; நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது!

by Column Editor

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி வரும் ‘அன்பறிவு’ திரைப்படம் நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்லீயிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த அஸ்வின் ராம் என்பவர் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி ‘அன்பறிவு’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்படத்தில் நடிகை காஷ்மிரா பர்தேசி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதியே இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் நெப்போலியன் ஹிப்ஹாப் ஆதியின் தாத்தாவாக நடித்துள்ளார். விதார்த், சாய்குமார், தீனா மற்றும் சங்கீதா உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஆதி இந்தப் படத்தில் முதன்முறையாக கிராமப்புற கதையில் நடித்துள்ளார். மேலும் அவர் இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அன்பறிவு திரைப்படம் நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment