இன்னும் கலக்கும் மாநாடு … கிறிஸ்துமஸ் நாளில் காத்திருக்கும் மாஸ் அப்டேட்….

by Column Editor

தியேட்டர்களில் கலக்கி வரும் மாநாடு வரும் 24-ம் தேதி கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக சோனி லைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களின் பல ஆண்டு எதிர்பார்ப்பாக இருந்த சிம்புவின் மாநாடு கடந்த நவம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழில் அதிகம் வெளிவராத, டைம் லூப் ஜர்னரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை யாரும் எதிர்பாராத பல ட்விஸ்டுகள் மற்றும் சுவாரஸ்யமான விஷயங்களை உள்ளடக்கி, மிகவும் புத்திசாலித்தனமாக கதைக்களம் அமைத்துள்ளார் வெங்கட் பிரபு என தொடர்ந்து இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

எஸ்.ஜே .சூர்யாவை தவிர இந்த கதாபாத்திரத்தை யாராலும் நிறைவு செய்ய முடியாது என ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு, வில்லத்தளத்தில் மிரட்டியுள்ளார். ஒட்டு மொத்த படக்குழுவும் இந்த படத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளனர் என்பதும் நன்றாகவே தெரிகிறது. இப்படம் வெளியான இரண்டே நாட்களில் ஐஎம்டிபியில் 10க்கு 9.6 ரேட்டிங்கையும் பெற்றிருந்தது.

ஏற்கனவே இந்த படம் வெளியாகி இரண்டே நாட்களில் சுமார் ரூ.15 கோடி வசூலித்ததாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருந்தார். இதற்கிடையே மாநாடு படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என இயக்குனர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

இந்நிலையில் தியேட்டர்களில் கலக்கி வரும் மாநாடு வரும் 24-ம் தேதி கிருஸ்துமஸ் விழா சிறப்பாக சோனி லைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment