நமக்கு சோறு தான் முக்கியம்.. பிக் பாஸ் பிரியங்காவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

by Column Editor

பிக் பாஸ் வீட்டில் நேற்று பேருந்து டாஸ்க் வழங்கப்பட்டது. பல மணி நேரம் நீடித்த அந்த டாஸ்கில் கடைசிவரை கீழே இறங்காமல் யார் அமர்ந்து இருக்கிறாரோ அவர் தான் வெற்றியாளர். அந்த டாஸ்கில் ராஜு முதல் ஆளாக கீழே இறங்கிவிட்டார்.

போட்டியாளர்கள் ஒருகட்டத்தில் யார் கீழே இறங்குவது என சண்டை போட தொடங்கிவிட்டனர். மேலும் பேருந்துக்குள் இருக்கும் நபர்களுக்கு பிக் பாஸ் பல்வேறு தடங்கல்களை பிக் பாஸ் கொண்டு வந்தார். தண்ணீர் தெளிப்பது, இடத்தை குறைப்பது, இருக்கைகளை வெளியில் போட சொல்வது என பல விஷயங்களை செய்தார்கள்.

ஆனால் அதற்கெல்லாம் அசராமல் பிரியங்கா இருந்தார். அவர் இறுதியில் ஒரு பீசாவுக்காக கீழே இறங்கிவிட்டார். வெளியேறிய போட்டியாளர்களுக்கு மட்டும் பிக் பாஸ் பீசா அனுப்பி வைத்திருந்தார். அதை ராஜு, சிபி உள்ளிட்டவர்கள் போட்டி நடக்கும் இடத்தில் அனைவருக்கும் காட்டி காட்டி சாப்பிட தொடங்கினார்கள்.

அப்போது பீசா சாப்பிட்டே ஆக வேண்டும் என பிரியங்கா கீழே இறங்கிவிட்டார். “நமக்கு சோறு தான் முக்கியம்” என நெட்டிசன்கள் தற்போது பிரியங்காவை கிண்டல் செய்து வருகின்றனர்.

அதே நேரத்தில் பீசா அனுப்பி வைத்த பிக் பாஸ் டீம் பிளான் சூப்பர் என்றும் தெரிவித்து வருகின்றனர். இன்றைய ப்ரோமோவுக்கு கீழே வந்த கமெண்டுகளை நீங்களே பாருங்க..

Related Posts

Leave a Comment