120
பாரிய அளவில் அணுசக்தி விரிவாக்கத்திட்டங்களை பிரித்தானிய அரசு முன்னெடுத்து வருகின்றது.
நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், மின்கட்டணங்களைக் குறைக்கவும், எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாகவும் குறித்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 2050 ஆம் ஆண்டுக்குள் 24GW உற்பத்தி செய்யும் திறன் கொண்ட அணு உலைகளை உருவாக்குவதற்கு பிரித்தானிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இது தேசிய மின் தேவையில் கால் பங்கை பூர்த்தி செய்ய போதுமானது எனவும் கூறப்படுகின்றது.
அத்துடன் 2030 முதல் 2044 வரை ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒன்று அல்லது இரண்டு புதிய அணுஉலைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.