225
பிரித்தானியாவில் மன்னர் சார்லஸ இன்; உருவம் பொறித்த நாணயத்தாள்கள் புழக்கத்திற்கு வந்துள்ளன.
எலிசபெத் மகாராணியின் மறைவுக்குப் பிறகு பிரிட்டன் அரசராக சார்லஸ் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரது பதவியேற்பு நிகழ்ச்சியை சிறப்பிக்கும் வகையில், அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயங்கள் வெளியிடப்பட்டன.
மன்னர் சார்லஸ் உருவம் பொறித்த 10, 20 மற்றும் 50 பவுண்டு நாணயத்தாள்களை இங்கிலாந்து வங்கி வெளியிட்டுள்ளது.
BANK OF INGLAND பிரதிநிதிகளால் அவரது உருவப்படம் கொண்ட முதல் நாணயத்தாள்கள் நேற்று வழங்கப்பட்டன.
மூன்றாம் மன்னர் சார்லஸ் உருவப்படம் கொண்ட பிரிட்டன் நாணயத்தாள்கள் நேற்று முதல் புழக்கத்திற்கு வந்தன.
வரும் வாரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சல் அலுவலகக் கிளைகளில் இருந்தும் அவை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.