இந்திய பிரதமர் நரேந்திர மோடி இராஜினாமா!

by Editor News

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் தனது இராஜினாமா கடிதத்தை, இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் கையளித்துள்ள நிலையில், அதனை ஏற்றுக்கொண்டுள்ள இந்திய குடியரசுத் தலைவர் நரேந்திர மோடியை இடைக்கால பிரதமராக தொடரும்படி கேட்டுக்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்திய மக்களை தேர்தல் நடைபெற்று, தேர்தல் முடிவுகளும் வெளியாகியுள்ள நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 8ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் தனது பதவியை இராஜினா செய்துள்ளார்.

நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகளின் படி, பாரதிய ஜனதா கட்சி மட்டும் 240 இடங்களையே கைப்பற்றியிருந்தது.

வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் பிரகாரம், பா.ஜ.கவிற்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தனது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடன் கைகோத்து, மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலைமையே அந்தக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று அவரது இல்லத்தில் நடைபெற்றது.

இதன்போது, புதிய அமைச்சரவை பதவியேற்க ஏதுவாக, 17 ஆவது மக்களவையை கலைக்க பரித்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், குறித்த தீர்மானம் இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தகடகது.

Related Posts

Leave a Comment