மீண்டும் வெளியுறவு அமைச்சராக எஸ்.ஜெய்சங்கர் பொறுப்பேற்பு!

by Editor News

வெளியுறவு அமைச்சராக எஸ்.ஜெய்சங்கர் மீண்டும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

அதன்படி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் ஜெய்சங்கருடன் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் ஆகியோர் முன்னதாக வகித்த அதே அமைச்சுக்களை பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவிக்கையில் “மீண்டும் ஒரு முறை வெளியுறவு அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதை மிகப்பெரிய கவுரவமாகக் கருதுகிறேன். கடந்த ஆட்சியில் வெளியுறவு அமைச்சகம் வெகு சிறப்பாகச் செயல்பட்டிருந்தது

அதன்படி ஜி20 மாநாட்டை தலைமையேற்று நடத்தினோம்,கொரோனா சவால்களை எதிர்கொண்டோம், கொரோனா தடுப்பூசிகளைத் தயாரித்துப் பகிர்ந்து கொண்டோம், உக்ரைன் உள்பட வெளிநாட்டு போர்களில் சிக்கிய இந்தியர்களை பத்திரமாக தாயகம் மீட்டு வந்தோம் என தெரிவித்தார்

மேலும் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான நம் உறவுகள் மற்றும் பிரச்சினைகள் வேறுபட்டவை. பாகிஸ்தானுடன் ஆண்டாண்டு காலமாக இருக்கும் எல்லை தாண்டிய பயங்கரவாத சிக்கலுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Related Posts

Leave a Comment