பாக்கெட் மாவுகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள்…

by Editor News

இன்றளவில் துரித உணவுகளுக்கு மக்கள் எப்படி அடிமையாக இருக்கிறார்களோ, அதே அளவுக்கு ரெடிமேட் உணவுப் பொருட்கள் மீதும் மோகம் கொண்டுள்ளனர். கடைகளில் விற்பனை செய்யப்படும் பரோட்டா, சப்பாத்தி, நூடுல்ஸ் போன்ற பல உனவுகளில் இன்றளவில் ரெடிமேட் கிடைக்கிறது.

சென்னை, பெங்களூர், மும்பை போன்ற பெருநகரங்களில் வணிக வளாகத்தில் இவை விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில், நமது ஊர்களில் மாவு பாக்கெட் விற்பனை செய்யும் வியாபாரம் சமீபகாலமாக சூடேறி இருக்கிறது.

ஏனெனில் அன்றாடம் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வருவோர், எளிமையாக இட்லி அல்லது தோசை சுட்டு சாப்பிட்டு உறங்க அதனை தேர்வு செய்கின்றனர். இந்நிலையில், பாக்கெட் மாவை வணிக ரீதியாக விற்பனை செய்வோர், அதன் புளிப்பு தன்மையை நீக்க போரிக் ஆசிட்டை சேர்க்கின்றனர்.

பாக்கெட் மாவு தீமைகள் :

இந்த போரிக் ஆசிட் புண்களுக்கு தடவப்படும் மருந்து ஆகும். இதனை சாப்பிட குடல் பாதிப்பு, வயிறு உபாதை, அஜீரண கோளாறு ஏற்படும். அதேபோல, எந்த விதமான நீரில் அவை அரைத்து நமக்கு வழங்கப்படுகிறது என்பது தெரியாது.

அசுத்தமான நீரை பயன்படுத்தி அரைக்கப்படும் மாவை சமைத்து சாப்பிட்டால் நாள்பட்ட வயிற்று வலி, உடல் வறட்சி, இரைப்பை நோய்கள் உண்டாகும். அதேபோல, சில நேரம் புளித்த விற்பனை செய்யப்படாத மாவுகளை நாம் அவசரத்திற்கு என வாங்கி வந்து பின் உண்மையை அறிந்து ஏமாற்றி அடைவோம்.

Related Posts

Leave a Comment