முகம் சிவப்பழகு பெற தேன்..!

by Editor News

பொதுவாக தேன் சரும அழகை அதிகரிக்க மிகவும் பயன்படுகின்றது. தேனில் அதிகளவு ஆன்டிஆக்சிடன்ட் அதிகளவு நிறைந்துள்ளது. தேன் சருமத்தை (Honey Beauty Tips in Tamil) என்றும் இளமையுடனும், பொலிவுடனும் வைத்துக்கொள்ளும். சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தேன் ஒரு சிறந்த இயற்கை பொருளாக விளங்குகிறது.

முகம் சிவப்பழகு பெற ஒரு பௌலில் ஒரு ஸ்பூன் பட்டை தூள் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்.

பின்பு இரண்டையும் ஒன்றாக கலந்து சருமத்தில் தடவ வேண்டும். பின்பு ஐந்து நிமிடங்கள் கழித்து சருமத்தை சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.

இவ்வாறு செய்வதினால் சருமத்தில் ஏற்படும் பருக்கள், அந்த பருக்களினால் ஏற்படும் தழும்புகள் மற்றும் சருமத்தில் ஏற்படும் கருத்திட்டுகள் ஆகிய சரும பிரச்சனைகள் நீங்கும்.

முகம் சிவப்பழகு பெற, இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வரலாம்.

Related Posts

Leave a Comment