முடி அடர்த்தியா .. நீளமா.. கருகருன்னு வளர ஆயுர்வேதம்..

by Editor News

ஆயுர்வேதத்தின் படி கூந்தலின் வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்க்கை முறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. சமச்சீரான உணவை பின்பற்றுதல், மன அழுத்தத்தை நிர்வகித்தல் மற்றும் கூந்தலுக்கு ஏற்ற எண்ணெய் தடவுதல் உச்சந்தலையில் மசாஜ் போன்ற சுய கவனிப்பு முறைகளையும் சேர்த்து செய்யும் போது கூந்தலின் ஆரோக்கியம் சிறப்பாக மேம்படுகிறது. மூலிகைகள் முடிக்கு ஊட்டமளிக்கும் புத்துணர்ச்சியூட்டும் பண்புகளை கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. உங்கள் கூந்தலுக்கு ஊட்டமளிக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

ஆயுர்வேதத்தில் தலைமுடிக்கு பச்சைப்பயறு

புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை இவற்றில் உண்டு. கலோரிகள் குறைவாக இருப்பதால் எடையை கட்டுப்படுத்த முயற்சிப்பவர்களுக்கு இவை சரியான தேர்வும் கூட.

பச்சைபயறை சாலட், சாண்ட்விச் போன்றவற்றொல் சேர்த்து சாப்பிடலாம். புரதம் நிறைந்த பச்சைப்பயறை தோசையாக வார்த்து சாப்பிட்லாம். சூப் வைத்து குடிக்கலாம்.

​ஆயுர்வேதத்தில் தலைமுடிக்கு மோர்​

மோர் உடலுக்கு குளிர்ச்சியை உண்டு செய்வது போன்று உச்சந்தலையில் முடியின் வேர்களை அமைதிப்படுத்த செய்யும். ஆயுர்வேத மருத்துவத்தில் மோர் கூந்தலுக்கு செய்யும் நன்மைகள் பலவும் சொல்லப்படுகிறது.மோரில் இருக்கும் புரதம், கால்சியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பொடுகு இருக்கும் போது மோர் சேர்த்து வருவது அரிப்பு மற்றும் செதில்களாக இருக்கும் உச்சந்தலையை ஆற்ற உதவும். மோர் தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால் வயிற்று பிரச்சனைகளை ஆற்றும். கூந்தலில் ஷாம்பு செய்த பிறகு மோ பயன்படுத்துவது கூந்தலின் ஆரோக்கியத்தை மாற்றும்.

ஆயுர்வேதத்தில் தலைமுடிக்கு கறிவேப்பிலை

கறிவேப்பிலை இந்திய உணவு வகைகளில் பிரபலமான ஒன்று. ஆயுர்வேத மருத்துவத்திலும் கறிவேப்பிலை ஆரோக்கிய நன்மைகள் பலவும் அளிக்கின்றது. கறிவேப்பிலை வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் கொண்டுள்ளன. இது மயிர்கால்களை பாதுகாக்கின்றன. புதிய முடி வளர்ச்சியை தூண்டுகின்றன. உடல் ஆரோக்கியத்துக்கும் நன்மை செய்கின்றன.

கறிவேப்பிலையை உணவில் சேர்க்கலாம். கறிவேப்பைலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி கூந்தலுக்கு பயன்படுத்தலாம். கூந்தல் கருகருவென்று நீண்டு வளரும்.

ஆயுர்வேதத்தில் தலைமுடிக்கு முருங்கை இலை

முருங்கை பல நன்மைகளை கொண்டுள்ளது. அதில் அடர்த்தியான முடி வளர்ச்சியும் ஒன்று. இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி போன்ற ஊட்டமளிக்கும் பண்புகளும் இதில் உள்ளன.

உடலின் ஆரோக்கியமான செல்கள் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு வைட்டமின் ஏ அவசியம் தேவை. முருங்கை இலையை உணவில் சேர்க்கலாம். சூப் வைத்து குடிக்கலாம். முருங்கை இலை எண்ணெய் கூந்தலில் பயன்படுத்தலாம்.

ஆயுர்வேதத்தில் தலைமுடிக்கு வெந்தய விதைகள்​

முடி பராமரிப்பு பொருள்கள் மற்றும் உச்சந்தலை பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. கூந்தலுக்கு வெந்தய விதைகளை பயன்படுத்துவன் மூலம் கூந்தல் அடர்ந்து கருகருவென்று வளரும். கூந்தலை பளபளப்பாக வைத்திருக்கும் வெந்தய நீரை ஊறவைத்து கூந்தலை அலசலாம். இதை அரைத்து பேஸ்ட்டாக்கி கூந்தலில் மற்றும் உச்சந்தலையில் தடவி விடலாம்.

வெந்தய விதைகள் இயற்கை கண்டிஷனராக முடி பராமரிப்பு பொருள்களில் சேர்க்கலாம்.

ஆயுர்வேதத்தில் தலைமுடிக்கு பெருஞ்சீரக விதைகள்​

பெருஞ்சீரக விதைகள் முடி உதிர்தலுக்கு எதிராக செயல்படும். இது ஆக்ஸிகனேற்றிகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கொண்டவை. உச்சந்தலை நுண்ணறைகளை வலுப்படுத்தவும் செய்யும். தினசரி உணவில் பெருஞ்சீரகம் விதைகளை சேர்த்து வருவது முடி சிக்கலாவதை தடுக்கும். சேதமடைந்த முடியை குணப்படுத்தவும் செய்யும்.

பெருஞ்சீரக விதைகள் டீ போட்டு குடிக்கலாம். உணவில் சேர்த்து வரலாம்.

ஆயுர்வேதத்தில் தலைமுடிக்கு திரிபலா

திரிபலா என்பது ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கியமான ஒன்று. கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்றின் கலவையன இது ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களில் ஏராளமாக உள்ளன. இது முடியின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவும். திரிபலாவை கூந்தல் எண்ணெயில் சேர்த்து பயன்படுத்தி உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம். இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். முடி வளர்ச்சியையும் அடர்த்தியையும் அதிகரிக்கும்.

ஆயுர்வேதத்தில் தலைமுடிக்கு வேர்க்கடலை​

வேர்க்கடலை பல ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலம். இது முடி ஆரோக்கியத்தை புதுப்பிக்கும். இதில் இருக்கும் பயோட்டின் ஆனது முடி வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் பி மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இது முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்யும். முடி உதிர்வதை தடுக்கவும் உதவும். முடிக்கு ஊட்டமளிக்கவும் செய்யும். அதே நேரம் வேர்க்கடலை ஒவ்வாமை இருப்பவர்களுக்கு எதிர்விளைவுகளை உண்டு செய்யும்.

ஆயுர்வேதத்தில் கூந்தலை வலுப்படுத்த நெய்​

ஆரோக்கியமான தோல் மற்றும் முடி வளர்ச்சிக்காக ஆயுர்வேத்தில் நெய் பரிந்துரைக்கப்படும். ஆரோக்கியமான கொழுப்புகளை கொண்டிருக்கும் நெய் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை கொண்டது. இது குடல் செரிமானம் போன்று முடி வளர்ச்சிக்கு உதவும். முடி உதிர்தலை தடுக்கும். தினசரி உணவில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்ப்பது ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும்.

Related Posts

Leave a Comment