கண்ணில் உள்ள கருவளையம் நீங்க சூப்பர் டிப்ஸ்…

by Editor News

உருளைக்கிழங்கு சமையலில் இன்றியமையாத இடம் வகிக்கும் ஒன்றாகும். அதுபோக முகம் பளபளக்க, கருவளையம் நீங்க எனப் பல்வேறு சிறப்பம்சங்களையும் வைத்துள்ளது உருளைக்கிழங்கு.

உருளைக்கிழங்கைக் கொண்டு விதவிதமான ஃபேஸ் மாஸ்க் தயாரிப்பது பற்றி அறிந்துகொள்வோம். இவை கூடுதலாக உங்கள் சருமத்துக்குப் பொலிவைக் கொடுக்கும் என்பதைப் பயன்படுத்திய பிறகு நீங்கள் உணரத் தொடங்குவீர்கள்.

உருளைக்கிழங்கு ஃபேஸ் மாஸ்க்கை நீங்கள் வீட்டிலேயே எளிமையாகத் தயாரிக்க முடியும். உருளைக்கிழங்கை சுத்தம் செய்து தோல் நீக்கி அதை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

News18 Tamilநறுக்கிய உருளைக்கிழங்கை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் மாதுளை முத்துக்கள் கால் கப் சேர்த்து மீண்டும் நைஸாக அரையுங்கள்.

தண்ணீர் சேர்க்க வேண்டாம். அப்படியும் இறுக்கமாக இருந்தால் பால் அல்லது கெட்டித்தயிர் சேர்த்து அரைக்கலாம். எண்ணெய்ப்பசை சருமமாக இருந்தால் எலுமிச்சைச்சாறு சிறிது சேர்க்கலாம்.

இந்த பேஸ்ட்டை இறுக்கமாக ஆகும் வரை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்திருங்கள். அரைமணி நேரம் கழித்து அதை வெளியில் எடுத்து வட்ட வடிவில் மசாஜ் செய்வது போல் முகத்தில் கீழிருந்து மேல் நோக்கி தடவியபடி தேய்க்கவும்.

பிறகு 30 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுத்தால் முகம் மென்மையாக மிருதுவாக இருப்பதை உணரலாம். முகத்தில் இருக்கும் கறைகள் வெளியில் தெரியாது.

மேலும் உருளைக்கிழங்கு சாறும் சருமத்திற்கு அழகு சேர்க்கும். குறிப்பாக கருவளையத்தைப் போக்கி, சரும பொலிவை அதிகப்படுத்தும். தூங்க செல்வதற்கு முன்பு சிறிதளவு உருளைக்கிழங்கு சாறை முகத்தில் தடவி மசாஜ் செய்து விட்டு 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் கருவளையங்கள் மறையும், இரவில் ஆழ்ந்த தூக்கத்திற்கும் இது வழிவகுக்கும்.

Related Posts

Leave a Comment