முகத்தை பளிச்சிட செய்யும் சில அழகு குறிப்புகள் !!

by Column Editor

வேனல் கட்டிகள், பருக்கள், தேமல் இருந்தால், கஸ்தூரி மஞ்சள், சந்தனத்தை அரைத்துப் பற்று போடலாம். பாதத்தில் ஏற்படும் வெடிப்புக்கும் விளக்கெண்ணெய்யுடன் மஞ்சள் சேர்த்துப் பூசினால், சட்டென சரியாகும்.

கஸ்தூரி மஞ்சள் கிழங்கை அரைத்து உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்துக் குளித்தால், தோல் சம்பந்தமான நோய்கள் நீங்கும். கோடைக் காலத்தில் மஞ்சள் பூசுவதால், சருமம் குளிர்ச்சியாக இருக்கும்.

பசும் மஞ்சள் கிழங்கு, வெள்ளரிக்காயை அரைத்து எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து ஃபேஷியல் பேக் போட்டுவர, மாசு மரு இல்லாமல் முகம் பளிச்சென மாறும்.

கோரைக்கிழங்கு, பூலான் கிழங்கு, கஸ்தூரி மஞ்சள் இவற்றை அரைத்து, பச்சைப் பயறு மாவு கலந்து தினமும் உடலில் பூசிக் குளித்துவர, சருமத்தில் நிறம் கூடும்.

மஞ்சளைக்கூட அளவோடு பயன்படுத்துவது நல்லது. வாரத்தில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் மஞ்சள் அரைத்து பூசிக் குளிப்பதை வழக்கமாகக்கொள்ளுங்கள்.

பாக்கெட்டில் விற்கப்படும் மஞ்சள் பொடியில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் மஞ்சள் கலந்திருக்க வாய்ப்பு உண்டு. பசும் மஞ்சள் கிழங்காக வாங்கி அரைத்துக் குளிப்பது நல்லது.

Related Posts

Leave a Comment