கோடைக்காலத்தில் தலைமுடி பராமரிப்பு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்..

by Lifestyle Editor

குளிர்காலம் மாறி கோடைகாலம் வந்து விட்டதால் அதற்கு ஏற்றவாறு நமது சரும பராமரிப்பையும் மாற்றுவது அவசியம். கோடை காலத்தில் சன்ஸ்கிரீன் மற்றும் சருமத்திற்கான நீரேற்றத்திற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மாறிய இந்த வானிலைக்கு நமது சருமம் வித்தியாசமாக செயல்பட துவங்கும். அதே நேரத்தில் மயிர்கால்கள் மற்றும் தலைமுடியையும் சீசனுக்கு தகுந்தார் போல பராமரிக்க வேண்டும்.

வானிலை மாற்றத்தினால் தலைமுடி மற்றும் மயிர்கால்கள் வறண்டு, வியர்வையுடன், அரிப்பு மற்றும் பொடுகு நிறைந்ததாக காணப்படும். மேலும் முடி உதிர்வு ஏற்படலாம். இவற்றை சமாளிப்பதற்கு கோடை காலத்தில் நீங்கள் பின்பற்ற வேண்டிய தலைமுடி பராமரிப்பு வழக்கத்தை தெரிந்து கொள்ளலாம்.

ஊட்டச்சத்து நிறைந்த உணவு:

ஊட்டச்சத்துக்கள் அடங்கிய உணவு உங்கள் மயிர்க்கால்கள் மற்றும் தலைமுடிக்கு உதவியாக அமையும். வானிலை மாற்றத்தினால் நமது உணவிலும் ஒரு சில மாற்றங்களை நாம் செய்வோம் என்பதால் அதன் விளைவாக தலைமுடி சேதம் அடையலாம். குறிப்பாக நீங்கள் பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் உங்களுடைய புரத உட்கொள்ளலை அதிகரிப்பது அவசியம். நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் பருகுங்கள். இது உங்களுடைய தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அவசியம்.

எல்லா வானிலையிலும் எண்ணெய் பராமரிப்பு:

எந்த வானிலையாக இருந்தாலும் சரி மயிர்க்கால்கள் மற்றும் தலை முடிக்கு எண்ணெய் பயன்படுத்த மறக்காதீர்கள். தலைமுடியின் வேர்கள் முதல் நுனி வரை வாரத்திற்கு குறைந்தபட்சம் 2 முறையாவது நீங்கள் எண்ணெய் தடவ வேண்டும். எண்ணெய் தடவுவதோடு மட்டுமல்லாமல் மயிர்க்கால்களை மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, அவற்றிற்கு போதுமான அளவு ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்கிறது. தலைமுடிக்கு எப்பொழுதும் ஒரே மாதிரியான எண்ணெயை பயன்படுத்துங்கள்.

தலைமுடி மற்றும் மயிர் கால்களை எப்பொழுதும் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைக்கவும்:

சீசன் மாறிப்போனதால் மயிர்க்கால்கள் அல்லது தலைமுடி வறண்டு, எண்ணெய் பிசுக்கோடு காணப்படலாம். வெப்பமான மற்றும் ஈரப்பதம் நிறைந்த வானிலையில் மயிர் கால்களில் அதிகப்படியான எண்ணெய் மற்றும் வியர்வை உற்பத்தியாகும். எனவே தலைமுடி மற்றும் மயிர்க்கால்களை அவ்வப்போது சுத்தம் செய்து அதனை ஈரப்பதத்தோடு பராமரிப்பது அவசியம். வாரத்திற்கு குறைந்தது 3 முறை ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்துங்கள்.

தலை முடியை ட்ரிம் செய்தல்:

தலைமுடியை நீங்கள் வழக்கமான முறையில் ட்ரிம் செய்யும் பொழுது தலைமுடியின் ஆரோக்கியம் மேம்படுத்தப்பட்டு, பிளவு முனைகள் மற்றும் உதிர்ந்த முடி நீக்கப்பட்டு தலை முடி அழகாக மாறும். ஒவ்வொரு 3 முதல் 4 மாதங்களுக்கு ஒரு முறை தலைமுடியை ட்ரிம் செய்ய மறக்காதீர்கள்.

வெப்ப சிகிச்சையை நிறுத்தவும்:

வெப்பத்தை பயன்படுத்தும் தலைமுடிக்கான கருவிகளை இப்போதைக்கு உபயோகிக்க வேண்டாம். ஏனெனில் வெப்பம் உங்களுடைய தலைமுடியை பாதித்து அதனை வலுவிழக்க செய்துவிடும். மேலும் தலைமுடி எளிதாக உடைந்து வறண்டதாக மாறி, மோசமான முடி உதிர்வு ஏற்படலாம். அதுமட்டுமல்லாமல் வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்தி தலைமுடியை அலசவும்.

Related Posts

Leave a Comment