ஒரேநாளில் அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பூஸ்டர் தடுப்பூசிக்கு முன்பதிவு!

by Column Editor

அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் கொவிட் பூஸ்டர் தடுப்பூசிக்கு, முன்பதிவு செய்துள்ளதாக பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர்கள் வழங்கப்படும் என்று உறுதியளித்த ஒரு நாளுக்குப் பிறகு பொரிஸ் ஜோன்சன் இந்த எண்ணிக்கையை வெளிப்படுத்தினார்.

நேற்று (திங்கட்கிழமை) தடுப்பூசி தளங்களில் நீண்ட வரிசைகளில் பலர் காத்திருந்தார். சிலர் தடுப்பூசி பெற ஐந்து மணிநேரம் காத்திருக்கிறார்கள்.

பிரதமர் மற்றும் தேசிய சுகாதார சேவையினர் இப்போது தன்னார்வத் தொண்டர்களை, தடுப்பூசி மையங்களை இயக்க உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அடுத்த வாரத்தில், கால்பந்து மைதானங்கள், வணிக வளாகங்கள் மற்றும் ரேஸ்கோர்ஸ்கள் உட்பட நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான தடுப்பூசி தளங்கள், நடமாடும் சேவைகள் மற்றும் பாப்-அப்கள் உருவாகும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment