பிக்பாஸ் வீட்டில் மீண்டும் நுழைந்த நபர்.. கொண்டாட்டத்தில் போட்டியாளர்கள் !

by News Editor

இரண்டாவது போட்டியாளராக வெளியேற்றப்பட்ட அபிஷேக், மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளது போட்டியாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இன்று இரண்டு டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் விளையாடினர். அதன்படி முதலில் ‘என் கேள்விக்கு என்ன பதில்’ என்ற புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டு இசைவாணியும், தாமரைச்செல்வியும் விளையாடினர். அப்போது ஒருவர் தலையில் ஒருவர் மாறிமாறி முட்டை உடைத்துக்கொண்டதால் இருவருக்கிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அடுத்த டாஸ்க்காக உள்ளே, வெளியே அறிவிக்கப்பட்டது. இதில் ராஜூ ஒரு ஜோடியாகவும், ஐக்கி, இமான் அண்ணாச்சி ஒரு ஜோடியாகவும் விளையாடிய நிரூப் மற்றும் இமான் அண்ணாச்சி இடையே பிரச்சனை ஏற்பட்டது.

தற்போது இன்றைய தினத்தின் மூன்று ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஒரு ரூமில் நிறைய பரிசுப்பொருட்கள் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த பரிசுப்பொருட்களை திறக்க தாயம் போடும் உருட்டு விளையாட்டை விளையாடவேண்டும். அதன்படி போட்டியாளர்கள் ஒவ்வொருவராக தாயம் விளையாட, அதில் இருக்கும் எண்களை வைத்து பரிசு பெட்டியை இமான் அண்ணாச்சி திறக்கிறார்.

முதல் இரண்டு பரிசு பெட்டியை திறக்கும்போது சாக்லேட்டுகள் இருக்கின்றன. மூன்றாவது தாயம் உருட்டுபோது ஒன்பது என்ற நெம்பர் விழுகிறது. அந்த நெம்பரில் உள்ள பெட்டியை திறக்கும்போது போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அது என்னவென்றால் அந்த பெட்டியில் அபிஷேக் இருக்கிறார். இதனால் போட்டியாளர் இன்ப அதிர்ச்சி அடைந்து கொண்டாட்டத்தில் சத்தம் போடுகின்றனர். இரு வாரங்களாகவே அபிஷேக் மீண்டும் ரீ எண்ட்ரியாக உள்ளதாக தகவல் வந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளது எந்த மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Related Posts

Leave a Comment