இந்த வாரம் வெளியேற போவது இவரா? பிக் பாஸ் அல்டிமேட்டில் அடுத்த ட்விஸ்ட்!

by Column Editor

இந்த வார நாமினேஷனில் அபிராமி, தாடி பாலாஜி, சுருதி ஆகியோர் இடம்பெறாத நிலையில் பாலாஜி முருகதாஸ், நிரூப், அபிநய், அனிதா சம்பத், ஜூலி, ஷாரிக், சினேகன், தாமரை உள்ளிட்ட 8 பேர் இடம் பெற்றுள்ளனர்.

தமிழ் டிவி வரலாற்றில் பிரமாண்ட ரியாலிட்டி ஷோவாக இருக்கும் பிக்பாஸிற்கு ரசிகர்கள் மிக அதிகமாக இருக்கின்றனர். மக்களின் அபிமானதை பெற்ற முன்னணி தமிழ் சேனலாக இருக்கும் ஸ்டார் விஜய் டிவி-யில் பிக்பாஸின் 5 சீசன்கள் இதுவரை வெற்றிகரமாக டெலிகாஸ்ட் ஆகி இருக்கிறது. இந்த அனைத்து சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி, பிக்பாஸ் ஷோவிற்கு கூடுதல் சுவாரசியம் தந்துள்ளார். ஷோ பெற்றுள்ள வரவேற்பை வருடத்திற்கு 100 நாட்களுக்கு மட்டுமே பிக்பாஸ் ஜுரத்தில் மக்களை வைத்திருக்கலாமா என்று யோசித்த ஷோ தயாரிப்பு நிர்வாகம், வழக்கமான பிக்பாஸ் 100 நாட்களையும் கடந்து மேலும் சில நாட்களுக்கு ரசிகர்களை பிக்பாஸ் ஜுரத்திலேயே வைத்திருக்க முடிவு செய்தது.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் ஷோவை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்று ரசிகர்களை குஷிப்படுத்த OTT-யில் பிக்பாஸை அறிமுகப்படுத்த உள்ளதாக பிக்பாஸ் சீசன் 5 நடந்து கொண்டிருக்கும் போதே தகவல் வெளியானது. இதனை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT-யில் பிக்பாஸ் அல்ட்டிமேட் என்ற பெயரில் புத்தம் புதிய ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த ஜனவரி 30-ஆம் தேதி முதல்disney plus hotstar-ல் பிக்பாஸ் அல்ட்டிமேட் ஷோ ஒளிபரப்பாகி வருகிறது.

24 மணிநேரமும் லைவ் ஸ்ட்ரீமிங் என்ற அடிப்படையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தற்போது பிக்பாஸ் OTT வெர்ஷன் ஓடி கொண்டிருக்குறது. விஜய் டிவி-யில் ஏற்கனவே ஒளிபரப்பான 5 சீசன் பிக்பாஸ் போட்டியாளர்களில் சிலர் இந்த Bigg Boss Ultimate ஷோவில் பங்கேற்று உள்ளனர். வனிதா விஜயகுமார், நிரூப், ஜூலி, அபிராமி வெங்கடாசலம், தாமரை செல்வி, நடிகர் தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், நடிகை சுஜா வருணி, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷாரிக், அபிநய், சுருதி, கவிஞர் சினேகன் உள்ளிட்ட 14 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் அல்ட்டிமேட் துவங்கியது.

ஏற்கனவே பங்கேற்ற போட்டியாளர்கள் என்பதால் பிக்பாஸ் அல்ட்டிமேட் ஹவுசில் அனல் பறக்கும் வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகள் அரங்கேறி வருகின்றன. 14 போட்டியாளர்களில் ஏற்கனவே சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் சுஜா வருணி வெளியேறி உள்ள நிலையில் விரைவில் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நடைபெற உள்ளது. இந்த வார நாமினேஷனில் அபிராமி, தாடி பாலாஜி, சுருதி ஆகியோர் இடம்பெறாத நிலையில் பாலாஜி முருகதாஸ், நிரூப், அபிநய், அனிதா சம்பத், ஜூலி, ஷாரிக், சினேகன், தாமரை உள்ளிட்ட 8 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் பாலாஜி முருகதாஸ், தாமரை, நிரூப், ஜூலி, அனிதா சம்பத் உள்ளிட்டோர் சேஃப் ஜோனிலும், கடைசி 3 இடமான டேஞ்சர் ஜோனில் ஷாரிக், அபிநய் மற்றும் சினேகன் ஆகியோர் உள்ளனர். இந்த மூவரில் யார் வரும் வாரம் எலிமினேட் ஆக போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Related Posts

Leave a Comment