343
			
				            
							                    
							        
    வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று(வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணம், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.
