சினிமா பிரபலங்களாக மாறிய பிக்பாஸ் போட்டியாளர்கள்..

by Lifestyle Editor

நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்‌ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ், இந்த சீசனில் வீட்டிற்குள்ளே பல மாற்றங்களை செய்துள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த வாரம் பிக்பாஸ் பிரபலத்தின் மகளான ஜோவிகா விஜயகுமார் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறினார்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் போட்டியாளர்கள் செய்யும் வேலைகள் குறித்து கமல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இன்றைய தினம் வெளியான ப்ரோமோவில் போட்டியாளருக்கு “ டான்ஸ் மரதன்” டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

சினிமா பிரபலங்களாக கெட்டப் போட்டு கொண்டு தன்னை சினிமா கதாபாத்திரங்களாக நினைத்து போட்டியாளர்கள் அட்டகாசம் செய்து வருகிறார்கள்.

இதனை பார்ப்பதற்கு வேடிக்கையாகவும், இனி வரும் நாட்களில் இது போன்று இருப்பவர்களா? என சிந்தணை எழுகிறது.

மேலும் விஷ்ணு, பூர்ணிமா இணைந்து ஒரு ஜோடி நடன காட்சியும் இருப்பதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இப்படி என்னென்ன சம்பவங்கள் காத்திருக்கின்றன என்பதனை அடுத்து வரும் ப்ரோமோக்களில் காணலாம்.

Related Posts

Leave a Comment