இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீசாகும் 4 தரமான படங்கள்…

by Lifestyle Editor

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு நிறைய சிறு பட்ஜெட் படங்களுக்கு வரவேற்பு கிடைத்தன. அதனால் புதுப்புது இயக்குனர்கள் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை எடுத்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் வருகிற டிசம்பர் 15-ந் தேதி தமிழ் சினிமாவில் புதுமுக இயக்குனர்களின் படங்கள் வரிசையாக ரிலீஸ் ஆக உள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

புதுமுக இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் கண்ணகி. இப்படத்தில் கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், ஷாலின் சோயா, அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற டிசம்பர் 15-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கு ஷான் ரஹ்மான் இசையமைத்து உள்ளார்.

ஆலம்பனா

பாரி கே விஜய் இயக்கத்தில் வருகிற டிசம்பர் 15-ந் தேதி திரைக்கு வர உள்ள திரைப்படம் ஆலம்பனா. இப்படத்தில் வைபவ் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பார்வதி நாயர் நடித்திருக்கிறார். பேண்டஸி கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக வினோத் ரத்தினசாமி பணியாற்றி இருக்கிறார்.

ஃபைட் கிளப்

கண்ணகி மற்றும் ஆலம்பனா படங்களுக்கு இந்த வாரம் தியேட்டரில் ரிலீசாகும் மற்றொரு திரைப்படம் ஃபைட் கிளப். உறியடி படத்தின் நாயகன் விஜய்குமார் தான் இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தை அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கி உள்ளார். இப்படத்தை லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாடு நிறுவனம் தான் வெளியிடுகிறது.

கூசே முனிசாமி வீரப்பன்

சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள டாக்குமெண்ட்ரி தான் கூச முனிசாமி வீரப்பன் என்கிற பெயரில் வெப் தொடராக வெளிவர உள்ளது. இதில் வீரப்பன் உயிரோடு இருந்தபோது எடுக்கப்பட்ட ஒரிஜினல் வீடியோக்களும் இடம்பெற்று உள்ளன. இந்த வெப் தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் டிசம்பர் 14-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

Related Posts

Leave a Comment