647
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் அண்ணாத்த.
இப்படத்தை என்னதான் குடும்பங்கள் கொண்டாடினாலும் அனைவரிடமும் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றது அண்ணாத்த.
மேலும் அடுத்ததாக ரஜினி எந்த திரைப்படத்தில் நடிப்பார் என்பது குறித்து எந்தஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தற்போது அண்ணாத்த திரைப்படம் பெரியளவில் வசூலில் சொதப்பியதால் ரஜினி தனது சம்பளத்தை அடுத்த படத்திற்கு குறைத்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி ரஜினி தனது அடுத்த படத்திற்கு ரூ 30 கோடி அளவிலான சம்பளத்தை குறைத்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.