நயன்தாரா பிறந்தநாளில் கேக் வெட்டிக் கொண்டாடிய ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படக்குழுவினர்!

by Column Editor

நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படம் உருவாகி வருகிறது. விக்னேஷ் சிவனின் முந்தைய படங்கள் போலவே இந்தப் படமும் காமெடி ரொமான்ஸ் ஜேர்னரில் உருவாகி வருகிறது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படம் தியேட்டர் வெளியீட்டைத் தவிர்த்து நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இன்று நயன்தாராவின் பிறந்தநாள். எனவே அவருக்கு ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இந்நிலையில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பிரம்மாண்ட கேக்கை நயன்தாரா வெட்டுகின்றார். உடன் விஜய் சேதுபதி, சமந்தா, விக்னேஷ் சிவன் ஆகியோர் உடன் இருக்கின்றனர்.

Related Posts

Leave a Comment