இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் சக நடிகருடன் குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை ஆல்யா மானசா

by Column Editor

ராஜா ராணி என்ற சீரியல் மூலம் தமிழ் மக்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ஆல்யா மானசா. அந்த சீரியலில் நாயகனாக நடித்தவருடன் காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

ஆனால் ஆல்யாவின் கல்யாணத்திற்கு அவரது வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை. திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக இருக்கும் அவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தை உள்ளார்.

அவரை பற்றிய வீடியோவை இருவரும் வெளியிட்ட வண்ணம் உள்ளார்கள். சமீபத்தில் நடிகர் சஞ்சீவ் இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் லைவில் பேசி வந்தார். அப்போது அவரிடம் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறாரா என கேடக அதற்கு அவர் ஆமாம் என்று கூறி ரசிகர்களுக்கு நல்ல செய்தி கூறினார்.

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் நடிகை ஆல்யா மானசா ராஜா ராணி 2 சீரியலில் தன்னுடன் நடிக்கும் சக நடிகருடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் பதறிப்போய் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இது தேவையா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment