எதிர்நீச்சல் சீரியலை பார்க்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. என்ன சொன்னார் தெரியுமா

by Lifestyle Editor

எதிர்நீச்சல்

சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலை திருசெல்வம் இயக்கி வருகிறார். இவர் இயக்கத்தில் இதற்குமுன் வெளிவந்த கோலங்கள் சீரியல் மாபெரும் வெற்றியடைந்தது.

இதை தொடர்ந்து பல சீரியல்களை இவர் இயக்கியிருந்தாலும், மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பது எதிர்நீச்சல் தான். திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளதால், ஞாயற்று கிழமை கூட ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அந்த அளவிற்கு TRPயில் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்நிலையில், எதிர்நீச்சல் சீரியலை பார்த்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியாக சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது :

அவர் அளித்த பேட்டியில் “நான் கோலங்கள் சீரியலை இயக்க முடித்த நிலையில், எனக்கு ரஜினிகாந்த் அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தது. நான் அவரை பார்க்க சென்றேன், சீரியலை பற்றியும் இன்னும் சில விஷயங்கள் குறித்தும் இருவரும் 45 நிமிடங்கள் பேசினோம். பின் புகைப்படம் எடுத்துக்கொண்டேன்”.

“எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் நடிகர் மாரிமுத்து, ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பின் போது. மரிமுத்துவிடம் எதிர்நீச்சல் சீரியலை பற்றி ரஜினிகாந்த் பேசியுள்ளார். எதிர்நீச்சல் சீரியலை தனது வீட்டில் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள், நானும் அவ்வப்போது பார்ப்பேன்” என ரஜினி கூறியதாக திருச்செல்வம் பேட்டியில் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment