ஈரமான ரோஜாவே 2 தொடரை தொடர்ந்து முடிவுக்கு வருகிறது விஜய் டிவியின் முக்கிய சீரியல்..!

by Editor News

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இந்த தொலைக்காட்சியில் நிறைய தொடர்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது, நிறைய இளைஞர்களை கவரும் வண்ணம் தொடர்கள் உள்ளன.

சமீப மாதங்களாக காற்றுக்கென்ன வேலி, பாண்டியன் ஸ்டோர்ஸ் என முக்கிய தொடர்கள் முடிவுக்கு வந்துள்ளன.

விரைவில் ஈரமான ரோஜாவே 2 தொடரும் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வர சில படப்பிடிப்பு தள புகைப்படங்களும் வெளியாகி இருந்தது.

இந்த நேரத்தில் தான் மற்றொரு தொடர் முடிவுக்கு வரும் தகவல் வந்துள்ளது. அதாவது மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த கண்ணே கலைமானே தொடர் கிளைமேக்ஸை எட்டிவிட்டதாம், விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது.

கண்ணே கலைமானே தொடருக்கு பதிலாக சக்திவேல் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது.

Related Posts

Leave a Comment