பாரதி கண்ணம்மாவில் புது அஞ்சலி இவர்தான்! வெளியான புகைப்படம்

by Column Editor

விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக இருந்துவரும் பாரதி கண்ணம்மாவில் நடிகர்கள் மாற்றப்படுவது தொடர்கதையாகிவிட்டது. ஹீரோயின் உட்பட பல நடிகர் நடிகைகள் இதில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில் ‘அவருக்கு பதில் இவர்’ என சொல்லி இயக்குனர் புதுப்புது நடிகர்களை கொண்டுவருகிறார்.

தற்போது அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கண்மணி மனோகரன் திடீரென வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக யார் நடிக்கப்போவது என அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் நினைத்தாலே இனிக்கும் சீரியல் புகழ் நடிகை அருள்ஜோதி இனி பாரதி கண்ணம்மாவில் அஞ்சலி ரோலில் நடிப்பார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

அவரது புகைப்படம் இதோ…

Related Posts

Leave a Comment