திடீரென நிறுத்தப்படும் விஜய் டிவியின் புது சீரியல்!

by Column Editor

தொலைக்காட்சிகள் அனைத்தும் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களாக ஒளிபரப்பி வருகின்றன. அப்படி விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பை தொடங்கிய சீரியல் வைதேகி காத்திருந்தாள்.

அதில் ப்ரஜின் மற்றும் சரண்யா துராடி ஜோடியாக நடித்து வந்தார்கள். ஆனால் சில தினங்களுக்கு முன்பு ப்ரஜின் நீக்கப்பட்டு அவருக்கு பதில் முன்னா ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.

இந்நிலையில் தற்போது சில தினங்களிலேயே அந்த தொடர் நிறுத்தப்பட்டுவிட்டதாக தகவல் பரவி வருகிறது. இது விஜய் டிவி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இது தற்காலிக நிறுத்தமா அல்லது இந்த தொடர் மீண்டும் தொடங்குமா போன்ற விவரங்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.

Related Posts

Leave a Comment