திடீரென லைவ் ஸ்ட்ரீமிங் பிக்பாஸ் அல்டிமேட்.. உண்மை காரணம் இதுதானாம்; வெளியேறும் முக்கிய போட்டியாளர்!

by Column Editor

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது 24 மணி நேர லைவ் நிகழ்ச்சியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி துவங்கியது முதலே பரபரப்பு பஞ்சமில்லாமல் போய் கொண்டிருக்கிறது.

தினம் ஒரு விஷயத்திற்காக சண்டை, வாக்குவாதம், இதற்கு இடையே டாஸ்க் மோதல்கள் வேறு என்று ரசிகர்களை மகிழ்விப்பதற்காக பல விஷயங்களை நாடகம் போல் செயல்படுத்தி வருகின்றனர்.

ஆனால், முதல் வாரத்தில் யார் வெளியேறப்போகிறார்கள் அதன் வெளிப்பாடாக தான் முதல் வாரத்தில் வெளியேற போகிறவர் யார் என்பது கடைசி வரை மாறிக் கொண்டே இருந்தது.

முதலில் ஜுலி தான் குறைவான ஓட்டுக்கள் பெற்றிருப்பதாகவும், அவர் தான் வெளியேற போவதாகவும் சொன்னார்கள். ஆனால் பிரஸ் மீட் டாஸ்க்கால் அப்படியே நிலை மாறியது.

அதன்பிறகு அபினய் போக போகிறார், வனிதா தான் போவார், சுருதி போவார் என பல பெயர்கள் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி முதல் ஆளாக சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுவரை தெரியாத போட்டியாளர்கள் பற்றிய பல உண்மைகள் வெளிவந்து, காரசார சண்டைகள் நடந்து வரும் நிலையில் பிப்ரவரி 4-ம் தேதி காலை திடீரென லைவ் ஸ்ட்ரீமிங் நிறுத்தப்பட்டது.

தொழில்நுட்ப காரணங்களால் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் வீட்டிற்குள் ஏதாவது பிரச்சனை நடக்கிறதோ. அதனால் தான் லைவ் ஸ்ட்ரீமிங் நிறுத்தப்பட்டு விட்டதா? என ரசிகர்கள் சந்தேகம் கிளப்ப துவங்கினர்.

இதனால் சில மணி நேரத்திலேயே மீண்டும் லைவ் தொடங்கப்பட்டது. மேலும், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் லைவ் கிடையாதாம்.

மாலை 6.30 மணிக்கு கமல்ஹாசன் வரும் போது தான் மீண்டும் லைவ் துவங்கப்பட உள்ளதாம். எவிக்ஷன் நடக்க இருப்பதால் கமல் வரும் நிகழ்ச்சிக்காக லைவ் நிறுத்தப்படுகிறதாம்.

Related Posts

Leave a Comment