நான் என்ன இதுவா… தாமரையை அசிங்கமா திட்டிய பிரியங்கா !

by Column Editor

நான் என்ன இளிச்ச வாயா என்று பிரியங்கா கொந்தளிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கின்படி ஒரு புதிய விளையாட்டு போட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விளையாட்டை போட்டியாளர்கள் இன்று விளையாடினர். கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டிருந்த கூடில் உள்ள முட்டையை போட்டியாளர்கள் உடைக்கும்போதும் தாமரை மற்றும் பிரியங்கா இடையே சண்டை ஏற்பட்டது.

இந்த குழாயடி சண்டை போல் நடந்த காட்சிகள் கடந்த ப்ரோமோவில் வெளியானது. இதையடுத்து இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் தாமரை குறித்து அசிங்கமாக பாவனியிடம் பேசும் காட்சிகள் உள்ளது. அந்த காட்சியில் பேசும் பிரியங்கா, நான் அட்டாக் பண்ணவில்லை ஆனால் என்னை யார் அட்டாக் செய்தார்களோ அவர்களை நான் அட்டாக் செய்தேன். நான் எப்போதும் அவளின் இதுவா. இளிச்ச வாய் என்று என் மண்டையில் ஏறி ஏதேனும் ஒட்டி இருக்கா என்று கோவமாக கேட்கிறார்.

இதையடுத்து பேசும் பிரியங்கா, அவளுக்காக நிறைய முறை நான் சப்போர்ட் செய்திருக்கிறேன்.‌ ஹவ் டாஷ்க்கு பொறுத்துக்கணும் என்று கேட்கிறார். இனி அவளிடம் பேசவதில்லை. இதுபோன்று ஏதேனும் நடந்தால் போயிக்கிட்டே இருக்கவேண்டியதுதான். இந்த நிகழ்ச்சி போதும் என்று பிரியங்கா கோவமாக சொல்லும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment