BB Ultimate: எலிமினேட் ஆன சுரேஷ் சக்ரவர்த்தி.. போகும் முன் செய்த முக்கிய விஷயம்

by Column Editor

பிக் பாஸ் அல்டிமேட் ஷோ ஒருவழியாக முதல் வாரத்தை கடந்து இருக்கிறது. வழக்கமாக பிக் பாஸ் ஷோவில் முதல் வாரம் எலிமினேஷன் இருக்காது. ஆனால் இந்த பிக் பாஸ் அல்டிமேட்டில் முதல் நாளே நாமினேஷன் நடைபெற்றது.

முதல் வாரம் என்பதால் எலிமினேஷன் இருக்குமா இருக்காதா என்பது பற்றி பல்வேறு கேள்விகள் போட்டியாளர்கள் மனதிலும் இருந்து வந்தது. ஆனால் கண்டிப்பாக எலிமினேஷன் இருக்கும் என கமல் அறிவித்து இருக்கிறார்.

வனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் தான் நாமினேஷன் லிஸ்டில் கடைசியாக இருக்கின்றனர். அதில் சுரேஷ் தாத்தா எலிமினேட் ஆகி இருக்கிறார்.

அடுத்த வாரத்திற்கு அவர் தான் தலைவராக தேர்வாகி இருந்த நிலையில் அந்த பதவியை அவர் சினேகனுக்கு கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்.

Related Posts

Leave a Comment