இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவர் தான்..

by Column Editor

கொரோனா தொற்று காரணமாக கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசனுக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

கொரோனா தொற்றில் இருந்து தற்போது மீண்டு வந்துள்ள கமல் ஹாசன், கண்டிப்பாக இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து நாடியா, நமிதா மாரிமுத்து, சின்னப்பொண்ணு, சுருதி மற்றும் மதுமிதா, இசைவாணி மற்றும் ஜக்கி பெர்ரி 7 நபர்கள் வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு அபிஷேக் தான் வெளியேறப்போகிறார் என்று அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே எவிக்ட் ஆகி வெளியேறி, மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த அபிஷேக் இந்த வாரம் இரண்டாவது முறையாக வீட்டை விட்டு வெளியேறவுள்ளார் என்று வெளியாகியுள்ள தகவல் அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

பொறுத்திருந்து பார்ப்போம் இந்த வார இறுதியில் என்ன நடக்கிறது என்று..

Related Posts

Leave a Comment