மேக்கப் போடப்போறீங்களா?… இந்த 5 தவறுகளை மட்டும் செய்யாதீங்க!

by Column Editor

மேக்கப் ஒர்க் அவுட் ஆகாது :‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பது உணவுக்கு மட்டுமல்ல, அனைத்து விஷயங்களுக்கும் பக்கவாக பொருத்தக்கூடியது.

எல்லா பெண்களுக்கும் மேக்கப் பிடிக்கும் என சொல்லிவிட முடியாது. ஆனால் சிலர் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக எப்போதாவது ஒருமுறை மேக்கப் செய்து கொள்வார்கள். சில பெண்கள் ஆபீஸ், காலேஜ் என தினந்தோறும் தாங்கள் செல்லும் இடத்திற்கு கூட மேக்கப் உடன் செல்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். மேக்கப்பின் ஒவ்வொரு ஸ்டெப்பையும் முறையாக கையாண்டால் மட்டுமே நீங்கள் தேவை போல் ஜொலிக்க முடியும், இல்லை என்றால் அதுவே உங்களுக்கு வயதான அல்லது மோசமான தோற்றத்தை கொடுத்துவிடலாம்.

மிகவும் சிறப்பாக முயற்சித்தும் உங்களுடைய மேக்கப் பெயிலியர் ஆக என்ன காரணம் என யோசித்திருக்கிறீர்களா? நம்மை அழகாக காட்டவே மேக்கப் செய்து கொள்கிறோம். அது சரியாக இல்லை என்றால், நீங்கள் பயன்படுத்திய முறையில் ஏதோ தவறு இருக்கிறது என அர்த்தம். மேக்கப் மூலம் இளமையான ஒளிரும் தோற்றத்தைப் பெற நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் செய்யும் இந்த 5 மேக்கப் தவறுகள் உங்களை வயதானவர்களாக காட்டலாம்…

ஓவர் மேக்கப் ஒர்க் அவுட் ஆகாது :‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பது உணவுக்கு மட்டுமல்ல, அனைத்து விஷயங்களுக்கும் பக்கவாக பொருத்தக்கூடியது. விலை கொடுத்து வாங்கிவிட்டீர்கள் என்பதற்காக டிரஸிங் டேபிள் மீது இருக்கும் அனைத்து மேக்கப் ஐயிட்டங்களையும் முகத்தில் வாரி பூசிக்கொள்வது ஒருபோதும் பலனளிக்காது. அப்படி மேக்கப் போட்டால் பார்ப்பவர்கள் எல்லாரும் ‘ப்பா… யாருடா இந்த பொண்ணு’ என விஜய்சேதுபதி பாணியில் கிண்டலடிக்க தான் தோன்றும். எனவே மேக்கப்பை குறைத்துக்கொள்ளுங்கள்.

தவறான அழகு சாதன பொருட்கள் :

தவறான அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்துவது என்ற தவறை பெரும்பாலான பெண்கள் செய்கின்றனர். உங்களின் ஸ்கின் ஷேடுக்கு ஏற்ற மேக்கப் பொருட்களை வாங்காமல், பிராண்டு அல்லது விலையை பார்த்து தேர்ந்தெடுப்பது தவறு. எப்போதும் உங்கள் நிறத்துடன் நன்றாகக் கலக்க கூடிய பொருட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இல்லையென்றால் முகத்துக்கு மேல் வேறு ஒரு லேயரை ஒட்டியது போல் வித்தியாசமாக காட்சியளிக்கும் நிலை ஏற்படும்.

கன்சீலர் பயன்பாட்டில் கவனம் தேவை :

நீங்கள் அப்ளே செய்யும் கன்சீலர், மேக்கப்பில் ஒரு அசத்தலான மேஜிக்கை செய்கிறது. ஸ்கீன் மீதுள்ள கரும்புள்ளிகள், வடுக்கள், முகப்பருக்கள் ஆகியவற்றை அப்படியே மூடி மறைத்து, முகத்தை பளிச்சிட வைக்கிறது. எனவே முகத்தில் உள்ள முகப்பருக்கள், கரும்புள்ளியை மறைக்க சருமத்துடன் ஒத்துப்போக கூடிய கன்சீலரை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். ஒருவேளை நீங்கள் தவறான கன்சீலரை பயன்படுத்தி மேக்கப் செய்தால், அதுமோசமானதாக மாறலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

இரவில் மேக்கப்பை அகற்றுங்கள் :

உங்கள் ஸ்கின் ஒரே நாளில் பளபளப்பாகவும், இளைமையாகவும் மாறிவிடாது. அதுக்கு பல நாட்கள் சீரான கவனிப்பு தேவை. நீங்கள் எப்படி சுவாசிக்கிறீர்களோ?… அதேபோல் உங்களுடைய சருமம் சுவாசிப்பது அவசியம். இரவில் உங்கள் மேக்கப்பை அகற்றாமல், அப்படியே தூங்க செல்வது நல்லது அல்ல. அது உங்களுடைய சரும செல்களை பாதித்து, ஸ்கின்னை மந்தமாகவும், உயிரற்றதாகவும் மாற்றும். இதனால் இளமையான ஸ்கின் கூட விரைவில் வயதான தோற்றத்திற்கு மாறலாம்.

மேக்கப் விஷயத்தில் இந்த தவறுகளை தவிர்த்தால் போதும், நீங்கள் நிச்சயம் ஒரு படி முன்னேறிவிடலாம். இந்த தவறுகளை எல்லாம் தவிர்த்துவிட்டு மேக்கப் செய்தால், யாருமே உங்களுடைய வயதை கணிக்க முடியாது என்பது நிச்சயம்.

Related Posts

Leave a Comment