கோடைக்காலத்தில் தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…

by Lifestyle Editor

வாழைப்பழம் ஒரு அதிசய பழம், இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. இதனால் உடலில் ஏற்படும் பல நோய்களை போக்கி, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும். செவ்வாழை, ரஸ்தாளி, பூவன் பழம், நாட்டு பழம், பச்சை பழம் என பலவகையான வாழைப்பழங்கள் உள்ளன. இவை அனைத்துமே ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.

காலை உணவுடன் ஒரு வாழைப்பழத்தை சேர்த்து கொள்ளுங்கள். இதில் கலோரிகள் குறைவு. ஆகவே காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிட்டால், பல மணிநேரம் பசி எடுக்காமல் இருக்கும். மேலும் அசிடிட்டி , கால்களில் ஏற்படும் பிடிப்பைத் தடுக்கவும் வாழைப்பழம் உதவுகிறது.

ஹைப்போ தைராய்டிசம் என்பது உடல் போதுமான தைராய்டு ஹார்மோன்களை உருவாக்காத ஒரு நிலை ஆகும். வாழைப்பழம் ஹைப்போ தைராய்டிசம் நிலையை சீராக்குகிறது. இதனால் உங்கள் மனநிலை மேம்படும். மேலும் மதிய நேரத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். குறிப்பாக கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சந்திக்கும் காலைச் சோர்வின் போது, வாழைப்பழத்தை சாப்பிட்டால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை வழங்கி சோர்வில் இருந்து விடுவிக்கும்.

வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது மலச்சிக்கலை போக்க உதவுகிறது. குடலியக்கம் சிறப்பாக இருந்தால், செரிமான பிரச்சனைகளான மலச்சிக்கல் வருவது தடுக்கப்படும். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுங்கள். மேலும், வாழைப்பழத்தில் குறைந்த அளவு பிரக்டோஸ் உள்ளது, இது ஐ.பி.எஸ் எனும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறியை கட்டுப்படுத்த உதவுகிறது.

பால், ரொட்டியுடன் வாழைப்பழத்தை சாப்பிடுவது ஆரோக்கியமான உணவாகும். தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியை வெல்ல இது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், ஜீரணிக்க எளிதானது என்பதால் குழந்தைகளுக்கும் இதனை உணவாக கொடுக்கலாம்.

வாழைப்பழத்தின் பிற நன்மைகள் :

* வாழைப்பழங்கள் எண்ணற்ற நன்மைகள் நிறைந்தவை, மேலும் அவை ஜீரணிக்க எளிதானவை,

* வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் நல்ல கொழுப்புக்கள் போன்ற உடலின் ஆற்றலை அதிகரிக்கும் சத்துக்கள் ஏராளமாக உள்ளது.

* வாழைப்பழத்தில் உள்ள நொதிகள், குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். ஒருவரது செரிமான மண்டலம் சுத்தமாக இருந்தால், உண்ணும் உணவுகளில் உள்ள சத்துக்கள் முறையாக உறிஞ்சப்படும். வாழைப்பழத்தில் அதிகளவிலான டயட்டரி நார்ச்சத்து, ஃபுருக்டோஸ் உள்ளது. எனவே தினமும் ஒரு வாழைப்பழத்தை மறக்காமல் சாப்பிடுங்கள்.

* ஏனெனில் வாழைப்பழம் இரத்த சோகையை சரிசெய்யும் இரும்புச்சத்தை வழங்குகிறது. அதோடு, வாழைப்பழத்தில் உள்ள பி வைட்டமின்கள், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வாழைப்பழங்களை வாங்கும் போது, உள்ளூர் வகையை சேர்ந்த நாட்டு பழங்களை வாங்கி உண்ணுங்கள்.

Related Posts

Leave a Comment