412
விஜய் தொலைக்காட்சியில் நிறைய ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது. நன்றாக ஓடிக் கொண்டிருந்த சீரியல்கள் சில முடிந்தும் உள்ளது.
அதில் ரசிகர்களுக்கு வருத்தம் தான், நன்றாக ஓடியதே ஏன் நிறுத்தினீர்கள் என பல சீரியல்களுக்காக ரசிகர்கள் பேசியிருக்கிறார்கள்.
அப்படி ரசிகர்கள் அதிகம் வரவேற்ற சீரியல்களில் ஒன்று ஈரமான ரோஜாவே. துருவ்-பவித்ரா ஜோடியாக நடித்த இந்த தொடர் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருந்தன.
ஆனால் சமீபத்தில் தான் இந்த தொடர் முடிவுக்கு வந்தது. தற்போது ஈரமான ரோஜாவே சீரியல் குழுவினர் இரண்டாம் பாகத்தை இயக்க தயாராகியுள்ளனர்.
இதில் நாயகன்-நாயகியாக நடிகர் சித்தார்த் மற்றும் பிக்பாஸ் புகழ் கேப்ரியலா இருவரும் ஜோடியாக நடிக்கிறார்களாம்.
இந்த இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.