வெண்பா ஜெயில்ல! ரோஷினி அவுட்! இயக்குனரிடம் கெஞ்சிய சீரியல் நடிகை..

by Column Editor

தொலைக்காட்சி தொடரில் மக்கள் இடத்தில் நல்ல வரவேற்பு பெற்று வருவது பாரதி கண்ணம்மா. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிப்பரப்பாகி டிஆர்பியில் நல்ல ஒரு இடத்தினை பிடித்து வருகிறது. சமீபத்திய எபிசோட்டுகள், கண்ணம்மா – பாரதியின் ரொமான்ஸ் மற்றும் காமெடி என காட்சிகள் அமைந்து வருகிறது.

இதற்கிடையில், கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி ஹரிபிரியன் வெளியேறியதால் அவருக்கு பதில் யாரும் தெரியாத வினுஷாவை நடிக்க வைத்திருந்தது ரசிகர்கள் சிலர் சீரியலை பார்க்கவே விரும்பவில்லை கருத்துக்களையும் இணையத்தில் தெரிவித்து இருந்தார்கள். அதேபோல் வில்லி கதாபாத்திர நடிகை பரீனாவும் பிரசவத்திற்காக சீரியலில் இருந்து சிலகாலம் விலகிவிட்டார்.

அவரின் காட்சிகளும் ஜெயிலில் இருப்பது போன்று அமைத்து காட்டாமல் எபிசோட்டினை நடத்தி வருகிறார்கள். பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர் பிரவீன் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பரீனாவிடம் நேரலையில் கால் செய்து பேசியும் ரோஷினி எதற்கு வெளியேறினார் என்ற காரணத்தையும் கூறியுள்ளார்.

ஆடியோ கால் மூலம் பேசிய பரீனா குழந்தை நலமாக இருக்கிறது என்றும் என்னை எப்போது ஜெயிலில் இருந்து எடுப்பீர்கள் என்று கேட்டு இயக்குனர் பிரவீனிடம் கெஞ்சியுள்ளார். குழந்தையை வைத்து எப்படி ஷூட்டிங்கில் இருக்க போகிறேன் என்ற சவால் எனக்குள்ளது என்று பரீனா கூறியுள்ளார்.

மேலும், ஒரு சீரியல் டாப்பில் இருக்கும் போது ரோஷினிக்கு பல வாய்ப்புகள் தேடி வந்தது. வெப்சீரிஸ் உட்பட அவர் மனதில் சில கேள்விகள் எழுந்துள்ளதாம். ஒரு வருடமாக அவர் இதுபற்றி கூறிய நிலையில் அவர் இப்படியொரு முடிவை எடுத்தார் ரோஷினி.

கதையை தாண்டி எனக்கு மிகப்பெரிய சப்போர்ட் எதுவும் இல்லை என்பதால் பல சவால்களை சந்தித்தேன் என்று கூறியுள்ளார் இயக்குனர் பிரவீன்.

Related Posts

Leave a Comment