‘நீ சும்மா இரு’.. ராஜுவால் கடுப்பான அக்ஷரா..

by Column Editor

ராஜுவை போட்டியாளர்கள் சேர்ந்து கவிழ்க்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் 30 நாட்களே உள்ள நிலையில் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக போட்டியாளர்கள் தனித்தனியே விளையாடி வருகின்றனர். அதற்காக கடுமையான டாஸ்க்குகள் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. அதனால் வழக்கம்போல் போட்டியாளர்களுக்குள் சண்டைகளும் ஏற்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்றைக்கும் புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அது குறித்த முதல் ப்ரோமோவில், டாஸ்க் என்னவென்று விளக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த டாஸ்க்கில் லுடோ விளையாட்டை போன்று ஒரு பெட்டி கொடுக்கப்படுகிறது. அந்த பெட்டியின் நான்கு புறமும் போட்டியாளர்களின் முகங்கள் இருக்கிறது.

இதையடுத்து முதல் பஸ்ஸர் அடிக்கும்போது போட்டி தொடங்கும் என்றும். மூன்றாம் பஸ்ஸர் அடிக்கும்போது எந்த போட்டியாளரின் புகைப்படம் மேலே நோக்கி இருக்கின்றதோ அந்த போட்டியாளர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார் என்ற விதிப்படி போட்டி தொடங்குகிறது. முதலில் தாமரை, ராஜு, அக்ஷரா, அமீர் உள்ளிட்ட போட்டியாளர்கள் அந்த பெட்டியை உருட்டுக்கின்றனர். அப்போது அபினய் புகைப்படம் மேல் நோக்கி வரும்போது, அந்த பெட்டியின் மீது ராஜு ஏறி உட்கார்ந்து விடுகிறார். இதனால் போட்டியாளர்கள் ராஜுவை கீழே தள்ளிவிடுகின்றனர்.

இருந்தப்போதிலும் மீண்டும் எழுந்து ராஜு பெட்டி மீது அமர்கிறார். நீ இப்படி மேலே உட்கார்ந்து கொண்டால், நான் எப்படி பெட்டியை உருட்ட முடியும் என்கிறார் அக்ஷரா. அதற்கு நீ சும்மா இரு என கிண்டலாக ராஜு கூற, கடுப்பாகி திட்டிக்கொண்டே செல்கிறார் அக்ஷாரா. இப்படி ராஜுவுடன் சண்டையுடன் முடியும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment