பிரியங்காவுடன் மீண்டும் துளிர்ந்த நட்பு.. கைகுலுக்கிய நிரூப்

by Column Editor

பிரியங்கா மற்றும் நிரூப் மீண்டும் நட்பான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் அடுத்தடுத்த சொந்தங்கள் வருகை தந்து உற்சாகப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் முதல் ப்ரோமோவில் பாவனியின் அம்மா மற்றும் சகோதரி வந்த நிலையில் அடுத்து பிரியங்காவின் அம்மா மற்றும் சகோதரர் வந்தனர். அம்மாவின் வருகையால் உற்சாகம் அடைந்த பிரியங்கா கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் விட்ட காட்சிகள் கடந்த ப்ரோமோவில் வெளியானது.

இதையடுத்து வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பிரியங்கா, தனது அம்மா மற்றும் சகோதரருடன் பேசுகிறார். அப்போது அந்த வழியாக செல்லும் நிரூப்பை பார்த்து, இவனிடம்தான் நான் கொஞ்சம் சண்டைப்போடுகிறேன் என்று பிரியங்கா கூறுகிறார். இதைக்கேட்ட நிரூப் அங்கே வருகிறார். என்ன பிரச்சினையெல்லாம் சரியாகிவிட்டதா என பிரியங்காவின் சகோதரர் கேட்கிறார். அதற்கு சரியாகிவிடும் என்று சொல்கிறார் நிரூப்.

மேலும் ப்ரெண்ட்ஷிப் என்பது வெளியே. இது விளையாட்டு அதை சரியாக விளையாடணும் என்கிறார் பிரியங்காவின் தயார். அப்போது பேசும் நிரூப், ப்ரெண்ட் என்று வந்துவிட்டால் நான் பிரியங்காவுக்கு சப்போர்ட் பண்ணுகிறேன் என்று சொல்வார்கள் என்கிறார். இந்த விஷயத்தில் வெளியே யாருமே உங்களை அப்படி நினைக்கவில்லை என்றும், எந்த டாஸ்க்க கொடுத்தாலும் சண்டைப் போட்டுக் கொண்டுதான் விளையாடி வருகிறீர்கள் என பிரியங்காவின் சகோதரர் கூறுகிறார். இதை ஏற்றுக்கொண்ட நிரூப், பிரியங்காவுடன் நட்பாகும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment