368
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது தற்போது சுவாரசியமாக செல்ல ஆரம்பித்து இருக்கிறது. நாளுக்கு நாள் முக்கியமான போட்டியாளர்களும் வெளியேறி வரும் நிலையில், இந்த வாரத்தில் சிபி, வருண், அபிஷேக், பிரியங்கா, இமான் அண்ணாச்சி, அக்ஷரா, தாமரைச்செல்வி, பாவனி, அபினய் மற்றும் ராஜூ ஆகிய 10 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் யார் வெளியேறுவார் என லீக்கான தகவலின் படி அபிஷேக் பெயர் முக்கியமாக அடிப்படுவதாகவும், அபினயின் இடம்பெறலாம் எனவும் கூறப்படுகிறது.
இன்றைய நிலையில், இன்றைக்கான முதல் ப்ரோமோ காட்சியில், கமல் மாஸாக சோபாவில் அமர்ந்தபடி இன்று வெளியேறப்போகும் அந்த ஒருவர் யார் என கேள்வி கேட்டப்படி பேசியுள்ளார்.